திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ப்ரேமம் பட இயக்குனருக்காக பார்த்திபன் செய்த நெகிழ்ச்சி செயல்!" மகிழ்ச்சியில் அல்போன்ஸ் புத்திரன்!
2013ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான "நேரம்"திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். "பிரேமம்" என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டாடியுள்ளார்.
தற்போது நடன இயக்குனர் சாண்டியை வைத்து இவர் "கிப்ட்" என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் திடீரென அல்போன்ஸ் புத்திரன் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் இருப்பதாக கூறி சினிமாவில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் பதிவிட்டிருந்தார்.
கமலஹாசனின் தீவிர ரசிகரான அல்போன்ஸ் புத்திரன், கடந்த 7ம் தேதி கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்தியை நடிகர் பார்த்திபன் கொண்டு சேர்த்துள்ளார். அதற்கு கமல் வாய்ஸ் நோட் மூலம் " அல்போன்ஸ் புத்திரனின் பாட்டு கேட்டேன். அவருக்கு மனசு நல்லா சந்தோஷமா இருக்கு.
அப்படியே இருக்கட்டும். உடம்பை பாத்துக்க சொல்லுங்க" என்று கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த பார்த்திபன், "அல்போன்ஸ் புத்திரனுக்காக கமல் சாரை அணுகினேன். உடல்நலமும், மன நலமும் பாதிக்கப்பட்ட ஒருவருக்காக நான் பயன்பட்டதால் என் வாழ்வின் ஒரு துளி அர்த்தப்படுத்தப்பட்டது " என்று கூறியுள்ளார்.