மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எதுக்கும் பின்வாங்காதீங்க..சித்தார்த்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபல இளம்நடிகை! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
நடிகர் சித்தார்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில், பாஜகவினர் தனது தொலைபேசி எண்ணை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விட்டதாகவும், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட கற்பழிப்பு, கொலை மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும் அவர்கள் பேசிய அனைத்து போன்கால்களையும் ரெக்கார்டு செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன் என பதிவிட்டிருந்தார்.
With you @Actor_Siddharth No backing down! There is an army of us with you! Stay strong and lots of love to fam✨ https://t.co/m0uXFgsghW
— Parvathy Thiruvothu (@parvatweets) April 29, 2021
இந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சித்தார்த்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்துள்ளனர். மேலும் சித்தார்த்துக்கு ஆதரவாக இந்திய அளவில் #IStandWithSiddharth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இந்நிலையில் நடிகை பார்வதி, எதற்கும் பின்வாங்காதீர்கள் சித்தார்த். உங்கள் பின்னால் ஒரு படையே இருக்கிறோம். தைரியமாக இருங்கள். உங்கள் குடும்பத்திற்கு எங்கள் அன்பு இருக்கும் என்று சித்தார்த்திற்கு ஆதரவாக சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
.