மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. பசங்க படத்தில் நடித்த அந்த குட்டி பையனா இது.! தாடியெல்லாம் வைத்து ஹீரோ ரேஞ்சுக்கு இருக்காரே!!
தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பசங்க. இப்படத்தை சசிகுமார் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்தில் ஹீரோவாக விமல் மற்றும் ஹீரோயினாக வேகா என்பவர் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின்களை விட குட்டீஸ்கள்தான் அனைவராலும் பெருமளவில் ரசிக்கப்பட்டனர். இந்த நிலையில் அண்மையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், சிறந்த திரைக்கதைக்கான விருதும் பசங்க படத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் படத்தில் அன்புக்கரசு ரோலில் நடித்த கிஷோருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு வெளிவந்த பசங்க படத்தில் சின்ன சமத்து பையனாக நடித்த கிஷோர் தற்போது நன்கு வளர்ந்து தாடியெல்லாம் வைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்நிலையில் கிஷோர் விருது வாங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் பசங்க படத்தில் நடித்த குட்டி பையனா இது!! என ஷாக்காகி போயுள்ளனர்.