திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காவியை மறைத்து களமிறங்கும் பதான்.. தடை-உடை பாணியில் ஷாருக்கான்.. சுதாரித்து ட்விஸ்ட் வைத்த சென்சார்.!
பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் பிரச்சனையை சந்தித்து வரும் நடிகர்களில் ஷாருக்கானை யாராலும் மறக்க இயலாது. ஹிந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பல கோடி ரசிகர்களை பெற்ற நடிகர் ஷாருக்கான்.
கடந்த ஆண்டில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி பெரும் சோகத்தில் அவரின் குடும்பத்தினர் இருந்தனர். இதற்கிடையில், நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோன், நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், சல்மான் கான் உட்பட பல நடிகர்களின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் பதான்.
இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். விஷால் தத்லானி இசையமைக்கிறார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வழங்குகிறது. படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல் ஒன்றில் கவர்ச்சியாக காவி உடையணிந்து நடிகை நடனமாடியது சர்ச்சையானது.
இதற்கிடையில் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்தபோது, அக்காட்சிகளை நீக்க சென்சார் தரப்பு படக்குழுவை கேட்டுக்கொண்டுள்ளது. மிற்றபடி படத்தில் சென்சார் குழு பெரிதளவில் மாற்றங்களை கூறாத நிலையில், படக்குழு ரசிகர்களுக்காக வெட்டகூறிய காட்சிகளை வெட்டாமல் வெளியிடலாம் என்ற காரணத்தால் காட்சிகளை எடிட் செய்து மீண்டும் சென்சார் பார்வைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.