மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்போ சீக்கிரம் டும்டும்டும் தான்.! உருகி உருகி காதலை சொன்ன பாவனி! குஷியான ரசிகர்கள்! வைரலாகும் பதிவு!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாவனி. இவர் கியூட்டான தனது சிரிப்பால், பேச்சால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளரான அமீர் பாவனியை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் ப்ரபோஸ் செய்தார். ஆனால் அதற்கு பாவனி எந்த பதிலும் அளிக்கவில்லை.
பிறகு இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்துகொண்டு அசத்தலாக நடனமாடினர். அங்கும் அமீர் பாவனிக்கு தொடர்ந்து தனது காதலை கூறிகொண்டே இருந்தநிலையில் பாவனி டைம் வேண்டும் என தயங்கி இருந்தார். பின் பாவனி தானும் காதலிப்பதை தெரிவித்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனி ஜோடி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து வெற்றி பெற்ற சந்தோசத்தை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த பாவனி தனக்கு ஆதரவாக இருந்த பலருக்கும் நன்றி கூறியுள்ளார். மேலும் இறுதியாக அவர் 'அமீர் இனி நாம் ஒன்றாக நமது வாழ்க்கை பயணத்தை தொடருவோம். நீ எனது நல்ல வாழ்க்கை துணையாக இருப்பாய். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். எப்பொழுதும் என்னுடையவனாக இருப்பாயா! ஐ லவ் யூ' என கூறியுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் எப்போது திருமணம் என கேட்டு வருகின்றனர்.