தூக்கினது போதுமா செல்லம்.. இணையத்தில் தெறித்த பவித்ராவின் வேற லெவல் மீம்ஸ்! ஆனால் உண்மை என்ன தெரியுமா??



pavitha share about her original twitter account

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. இவர் இதற்கு முன்பு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் சில குறும்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பவித்ராவுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் பவித்ராவின் பெயரில் உள்ள டுவிட்டர் கணக்கு ஒன்றிலிருந்து அவரது புகைப்படம் வெளியிடப்பட்டு, என்னை தூக்குங்கள் என பதிவிடப்பட்டுள்ளது.  இதற்காகவே காத்திருந்தது போல மீம்ஸ் கிரியேட்டர்கள் பலரும் பவித்ராவை தூக்கி செல்வது போல வித்தியாசமாக ஏராளமான மீம்ஸ்களை உருவாக்கி, தூக்கினது போதுமா செல்லம் என கேட்டு வெளியிட்டுள்ளனர்.

இதனைக் கண்ட பவித்ரா செம ஷாக்காகியுள்ளார். மேலும் அவர் அது தனது பெயரிலுள்ள போலியான கணக்கு எனவும், இது தான் என்னுடைய ஒரே ட்விட்டர் கணக்கு. என்னை பற்றிய அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள இந்த கணக்கை மட்டும் ஃபாலோ செய்யவும். போலி கணக்குகளில் வருபவைக்கு நான் பொறுப்பு அல்ல என தனது ஒரிஜினல் ட்விட்டர் பக்கத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார்.