திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட ரன்வீர்.! கண்டித்து மக்கள் செய்த தரமான காரியத்தை பார்த்தீங்களா! வைரல் வீடியோ!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் தீபிகா படுகோனை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு ரன்வீர் சிங் நடிப்பில் 83 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அண்மையில் ரன்வீர் சிங் பேப்பர் என்ற இதழுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோ ஹூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் வைரலாகி இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் பெண்களின் மனம் புண்படும் விதமாக ரன்வீர் சிங் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டதாக அவர் மீது மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
Clothes donation drive held for #RanveerSingh in Indore. pic.twitter.com/jxmInVztVc
— Tari Poha (@Alone_Mastt) July 26, 2022
இந்நிலையில் டெல்லியில் இந்தூரில் ரன்வீருக்கு உடை வழங்கும் இயக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அதில் ஒரு தெருவில் மேசை ஒன்றில் நிர்வாணமாக இருக்கும் ரன்வீர் சிங்கின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டி வைத்துள்ளது. அதில் மக்கள் தங்கள் ஆடைகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளனர். அது வைரலாகி வருகிறது.