சூர்யாவின் பேரழகன் பட நடிகையின் இன்றைய பரிதாப நிலைமை.. கண்ணீருடன் உருக்கமான பேட்டி; சூர்யாவை நேரில் பார்க்க ஆசை..!



perazhagan-movie-actress-karpagam-ails-sneha-talks

 

தன்னை கலாய்கிறார்கள் என்று தெரிந்தும் குடும்ப சூழ்நிலைக்காக பேரழகன் படத்தில் நடித்த நடிகை, தனது நிலை குறித்து அளித்த பேட்டி நெஞ்சை பதறவைத்துள்ளது.

சசி சங்கர் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பேரழகன். இப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில், அனைவராலும் கவனிக்கப்பட்டது மாற்றுத்திறனாளி வேடம். இப்படத்தில் சூர்யாவுக்கு பெண்பார்க்க செல்லும் போது, சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை கற்பகம். இவர் உயரம் குறைவாக இருக்கும் பெண்மணி ஆவார். 

இப்படத்திற்கு பின்னர் அவர் சில படங்களில் நடித்துவிட்டு திரையில் இறந்து விலகிவிட்டார். அதன்பின், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வியாசர்பாடி சந்தையில் காய்கறி, மாளிகைப்பொருள், ஜவுளி என சீசனுக்கு ஏற்றாற்போல விற்பனை செய்து வருகிறார். இவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை துயரம் குறித்து மனம் திறந்து பேசினார். 

அவர் பேசுகையில், "எனது குடும்பத்தில் நான் ஒருத்தியே உயரம் குறைந்தவள். எனது கணவர் ராஜாவும் அப்படிதான். எங்களது வீட்டில் பெற்றோர் சேர்ந்து எங்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு முதலில் திருமணத்தில் விருப்பம் இல்லை. கணவர் என் மீது கொண்ட அன்பால் திருமணம் முடிந்து நீண்ட மாதங்கள் கடந்து அவரிடம் பேச தொடங்கினேன். எங்களுக்கு பிறகும் குழந்தையும் குள்ளமாக பிறக்கலாம் என்று கூறிய நிலையில், கடவுளின் செயலால் முதல் குழந்தை பெண்ணாக ஆரோக்கியத்துடன் பிறந்தாள். சராசரி உயரத்தோடு வளர்ந்தாள்.

Perazhagan

ஆனால், இரண்டாவது ஆண் குழந்தைக்கு அப்பேறு கிடைக்கவில்லை. அவன் உயரம் குறைந்தே பிறந்தான். குடும்ப கஷ்டத்தை குறைக்க சினிமா, சீரியல் என நடித்து வந்தேன். பேரழகன் படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிக்க முதலில் பயமாக இருந்தது. என்னை கிண்டல் செய்கிறார்கள் என்று தெரிந்தும் அக்காட்சியில் நான் நடித்தேன். அப்படத்தின் வெளியீடுக்கு பின்னர் பலரும் என்னை சினேகா என்றே அழைத்தார்கள். அப்படத்திற்கு பின்னர் சூர்யாவை நேரில் பார்க்க வாய்ப்பே கிடைக்கவில்லை. 

எனது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைக்க நேரில் சென்றபோது அவர் வெளியூரில் இருந்தார். சில நாட்கள் கழித்து தபால் வழியில் ரூ.5 ஆயிரம் நிதிஉதவி அவரால் அனுப்பி வைக்கப்பட்டது. அவரை நேரில் சந்தித்து பேசவேண்டும் என ஆசையாக உள்ளது. நடிகர் சங்கமோ, முன்னணி நடிகர்களோ எங்களுக்கு உதவவில்லை. சராசரி உயரம் இருந்தால் கூட மூட்டைதூக்கி பிழைத்திருப்போம், எதற்கும் வாய்ப்பில்லாமல் போனது. இப்போது துணி வியாபாரம் செய்கிறேன்" என்று தெரிவித்தார்.