திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிம்பிளா முடிய வேண்டியதை இப்படியா பண்ணுவீங்க வசீ?.. நெட்டிசன்கள் கலாய்.!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கடந்த 2010 ஆண்டு, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எந்திரன் (Enthiran). இப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், கருணாஸ், சந்தானம், தேவதர்ஷினி உட்பட பலரும் நடித்திருந்தனர். ரூ.130 கோடி பொருட்செலவில் உருவான திரைப்படம், ரூ.350 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்திருந்தது. படத்தின் இசையமைப்பு பணிகளை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டு இருந்தார்.
இயந்திரத்தின் காதல்
இயந்திர மனிதனை உருவாக்கும் ஆராய்ச்சியாளர், தனது குருவும் - எதிரியுமான வில்லனால் சூழ்ச்சியில் சிக்கவைக்கப்பட்டு, இயந்திர மனிதனின் செயல்திறன் மாற்றப்படுகிறது. அதனால் இயந்திரத்திற்கு ஏற்படும் காதல், அதனை எதிரி உபயோகம் செய்துகொண்டது, இந்த சம்பவத்திற்கு பின் நடந்த மோதல்கள் என படம் விறுவிறுப்புடன் அமைந்து இருந்தது. இயந்திர மனிதனாகவும், ஆராய்ச்சியாளராகவும் ரஜினி நடித்து அசத்தி இருந்தார்.
இதையும் படிங்க: வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
நெட்டிசன்கள் கலாய்
இந்நிலையில், இந்த விசயத்திற்கு நல்ல தீர்வை இன்றுள்ள நெட்டிசன்கள் கண்டறிந்துள்ளனர். கதைப்படி சிட்டி ரோபோட் தனது காதலி சனாவின் மீது ஆசைகொள்ள, வசீகரன் சிட்டியை உடைத்து நொறுக்கி குப்பையில் வீசிவிடுவார். பின் சிட்டி போராவின் தவறான முடிவால் வில்லனாக மாறி அசால்ட் செய்வார். இந்த பிரச்சனையை தவிர்க்க, எளிய முறையில் வசீகரன் பெண் மனித இயந்திரத்தை கண்டறிந்து சிட்டிக்கு கொடுத்திருக்கலாமே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதையும் படிங்க: Vettaiyan Trailer: அனல் பறக்க மாஸ் காண்பித்த ரஜினிகாந்த்; "வேட்டையன்" படத்தின் ட்ரைலர் இதோ.!