மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜய்யின் லியோ; 4 மணி சிறப்பு காட்சி.! நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!!
தளபதி விஜய்யின் லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இதை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் 19 முதல் 24ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம். சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் லியோ படத்தின் தயாரிப்பு குழு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும்,9 மணி காட்சியை 7 மணிக்கு திரையிட அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அதனை விசாரித்த நீதிபதி 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.