மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்னொரு டீ சாப்பிடலாமா?? 3 வருஷத்திற்கு பிறகு பேட்ட படக்குழு வெளியிட்ட டெலிடட் காட்சி! சூப்பர் ஸ்டார் மரண மாஸ்தான்!!
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் ஹீரோவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் பேட்ட திரைப்படத்தில் த்ரிஷா, நவாஸ்தீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீசான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. மேலும் 250 கோடிக்கு வசூல் சாதனையும் படைத்தது.
இந்த நிலையில் தற்போது படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் படக்குழு பேட்ட படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ரஜினி டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது விஜய் சேதுபதி தனது குழுவுடன் வருகிறார். அப்பொழுது ரஜினியுடன் இருப்பவர் பயந்து இங்கிருந்து போயிடலாம் என கூற, அதற்கு ரஜினி ஸ்டைலாக, தில்லாக அமர்ந்துகொண்டு இன்னொரு டீ சாப்பிடலாமா? என கேட்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.