மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழ் புத்தாண்டுக்கு சன் டீவியில் என்ன படம் தெரியுமா? வெளியாகி சில மாதங்களே ஆன படமா?
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஓன்று சன் தொலைக்காட்சி. தமிழ் மட்டும் இல்லாது இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது சன் நிறுவனம். சன் தொலைக்காட்சியின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். குறிப்பாக சன் டீவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்துவந்த காலம் மாறி இன்று இளைஞர்கள், இளம்பெண்கள் என பெரும்பாலானோர் சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். சீரியல் மட்டும் இல்லாது புது புது படங்களை ஒளிபரப்புவதிலும் சன் தொலைக்காட்சிக்கு நிகர் சன் தொலைக்காட்சிதான்.
புதிதாக வெளியான படங்களை திரை அரங்கில் மட்டுமே பார்க்க முடியும் என்பதை மாற்றி படம் வெளியான சில மாதங்களிலையே சன் டீவியில் ஒளிபரப்பி வருகிறது இந்நிறுவனம். இந்நிலையில் வரும் தமிழ் புத்தாண்டு மற்றும் சன் தொலைக்காட்சி தொடங்கி 26 வருடங்கள் ஆவதை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற பேட்ட படத்தை ஒளிபரப்பவுள்ளது சன் டிவி.
இதனை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது சன் நிறுவனம்.
Celebrate #26YearsOfSunTV with the season’s most spectacular premiere! #Petta premiering this Sunday at 6:30 PM on #SunTV! #26YearsOfSunTV @rajinikanth @trishtrashers @SimranbaggaOffc @VijaySethuOffl @BobbySimhaa @Nawazuddin_S @SasikumarDir pic.twitter.com/l8reFnBA6M
— Sun TV (@SunTV) April 8, 2019