மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேட்ட vs விசுவாசம்! முதல்நாள் வசூலில் வெற்றிபெற்றது யார்? முழு விவரம்!
பொங்கலை முன்னிட்டு ரஜினி நடித்த பேட்ட திரைப்படமும், அஜித் நடித்த விசுவாசம் திரைப்படமும் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களைத்தான் பெற்றுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் முதல் பாகம் விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாகம் சற்று தாங்களாகவே உள்ளது.
அதேபோல இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடித்துள்ள விசுவாசம் படம் முதல் பாகம் சொதப்பலாக இருந்தாலும், இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக செல்கிறது. ரஜினி, அஜித் ரசிகர்களை தாண்டி, நடுநிலையான ரசிகர்களை கேட்கும்போது, இரண்டு படங்களும் சுமாராக இருப்பதாகத்தான் கூறுகிறார்கள்.
திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை பொறுத்தவரை பேட்ட படத்தை விசுவாசம் படம் வசூலில் மிஞ்சியுள்ளதாக கூறுகின்றனர். இறுதியில் நேற்றைய நிலவரத்தைப் பொறுத்தவரை தமிழக வசூலைப் பொறுத்தவரை அஜீத்தின் ‘விஸ்வாசம்’ சுமார் 14.5 கோடி வரை வசூலித்து செய்துள்ளது.
‘பேட்ட’ வசூலுக்கும் குறைச்சலில்லை. அதன் முதல் நாள் வசூல் 11.5 கோடியை எட்டிப்பிடித்துள்ளது. இன்று ‘பேட்ட’ படம் கொஞ்சம் ட்ரிம் பண்ணப்படவிருப்பதால் அஜீத் படத்தின் வசூலை நெருங்கக்கூடும் என்கிறார்கள்.