மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
22வது புனே சர்வதேச திரைப்பட விழா.. 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வு.!
22 ஆவது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது.
புனேவின் 22வது சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் புனே சர்வதேச திரைப்பட விழாவில் எந்தெந்த திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 22 ஆவது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது. அதன்படி வெற்றி மாறனின் விடுதலை, சீனு ராமசாமியின் இடி முழக்கம், ஜெய்பிரகாஷின் காதல் என்பது பொதுவுடமை ஆகிய 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது.
மேலும், மலையாளத்தில் மம்மூட்டி நடித்த காதல் தி கோர் மற்றும் ஜோஜு நடித்த இரட்டா ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.