#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதன்முறையாக வெளியானது பிகில் பட விஜய், நயன்தாராவின் புதிய போஸ்டர்! பயங்கர குஷியில் விஜய் ரசிகர்கள்!
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தான் 'பிகில்'. இந்த படத்தை மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், பிகில் டிரெய்லர் வருகிற 12-ந்தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில் பிகில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
அந்த அபோஷட்டரில் நடிகர் விஜய் மிகவும் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால் இந்தவருட தீபாவளியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.