மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட! பிகில் பாண்டியம்மாவா இது! மாடர்ன் உடையில் சும்மா மெர்சலாக்குறாரே! வைரலாகும் புகைப்படங்கள்!
அட்லி இயக்கத்தில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிகில். இதில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தொலைக்காட்சி நடிகரும், பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா.
இவர் தனது முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. மேலும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இந்திரஜா தற்போது சிவப்பு மாடர்ன் உடையில் அசத்தலான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் பிகில் பாண்டியம்மாவா இது? என செம ஷாக்காகி லைக்குகளை குவித்து வருகின்றனர்.