மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்று பிக்பாஸ் வீட்டில் ரியோவிற்கு காத்திருக்கும் மாபெரும் இன்ப அதிர்ச்சி! என்ன விஷயம் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் நான்கில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகர் ரியோ ராஜ். தொகுப்பாளராக இருந்த அவர் அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் பல வெற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதனைத் தொடர்ந்து ரியோ பாணா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் அவருடன் பால சரவணன், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Await for the peppy track #PlanPanniPanna from #planpannipannanum today to be unveiled @ #BiggBossTami4 episode enjoy @thisisysr music sung by @Premgiamaren lyrics by @Arunrajakamaraj @nambessan_ramya @rio_raj @SonyMusicSouth @positiveprint_ also catch it online from 10.30 pm pic.twitter.com/dcVnpHsnbd
— Badri Venkatesh (@dirbadri) December 18, 2020
இந்நிலையில் பிரேம்ஜி பாடி இப்படத்தில் இடம் பெற்ற பிளான் பண்ணி பண்ணனும் என்ற பாடலை படக்குழுவினர் இன்று பிக்பாஸ் வீட்டில் வெளியிட உள்ளனர். இது படத்தின் ஹீரோவான ரியோவிற்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.