மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ப்ளீஸ்... இதே மாதிரி மீண்டும் பரப்பாதீர்கள்..." கீர்த்தி சுரேஷ் தந்தை உருக்கம்!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஏஎல் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த ரஜினிமுருகன் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இவருக்கு இன்னொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே விக்ரம், விஜய் என முன்னோடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் கீர்த்தி சுரேஷ். மேலும் சூப்பர் ஸ்டாருடன் அண்ணாத்த படத்தின் அவருக்கு சகோதரியாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்ததோடு தென்னிந்திய சினிமாவிலேயே இவருக்கென ஒரு அங்கீகாரத்தையும் உருவாக்கி கொடுத்தது. அதன் பிறகு மிகச் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அந்தத் திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் காதல் மற்றும் திருமணம் குறித்து அடிக்கடி வரும் கிசுகிசுக்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக அவரது தந்தை தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் கூட வளைகுடா நாடுகளில் வசிக்கும் கீர்த்தி சுரேஷின் நண்பர் பர்ஷஹானுக்கும் கீர்த்தி சுரேஷ் இருக்கும் திருமணம் என செய்திகள் வெளியாகின. இது குறித்த செய்திகள் தங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக அவரது தந்தை தெரிவித்திருக்கிறார்.