மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபாஸ் பட சூட்டிங் ஸ்பாட்டில் நிறுத்தப்பட்டுள்ள 40 போலீசார்கள்!! ஏன்? என்னாச்சு? செம ஷாக்கில் ரசிகர்கள்!!
நடிகர் பிரபாஸ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், படக்குழுவிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் 40 போலீசார்கள் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். அவர் அடுத்ததாக கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். இந்நிலையில்தெலுங்கில் உருவாகி இந்தப் படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் தயாராக உள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில் இதன் படப்பிடிப்பை கோலார் தங்க வயலில் நடத்த திட்டமிட்டிருந்தனர். பின்னர் மாற்றப்பட்டு படப்பிடிப்பு தெலுங்கானாவில் உள்ள கோதாவரைகனியில் உள்ள நிலக்கரி சுரங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் பகுதிகளில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், படக்குழுவிற்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பிரபாஸ் உட்பட படக்குழுவினர் அனைவரும் போலீஸ் கமிஷனரை சந்தித்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் பாதுகாப்புக்காக 40 போலீசார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.