திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பிரபல அரசியல்வாதி! யார் தெரியுமா?
தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பது மட்டுமின்று சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் துவங்கியுள்ளார். இவரது முதல் படைப்பு கனா. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது தனது பட நிறுவனத்தின் இரண்டாவது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
‘ஸ்மைல் சேட்டை’ எனும் பெயரில் யூடியூப் ரசிகர்களை கவர்ந்து, பின்னர் பிளாக் ஷீப் என தனி சேனலை நடத்தி வரும் வேணுகோபாலன் தான் இந்த புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்தில் நாயகனாக சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியின் கடைசி சரவணனாக நடித்த வி.ஜே. ரியோ தான் நடிக்கிறார். நாயகியாக கன்ச்வால் ஷிரின் என்பவர் நடிக்கிறார்.
இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத்தும் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.