மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடிக்காதீங்க.. எனும்போது ஈரக்குலையே நடுங்குகிறது; உறைய வைக்கும் சினிமா பிரபலங்களின் டுவிட்டர் பதிவுகள்.!
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக் கொடூர கும்பல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி 200 பெண்களிடம் நட்பாக பேசி மடக்கி, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“உன்னை நம்பித்தானே வந்தேன்?” என்றும், “அடிக்காதிங்க, லெக்கிங்க்ஸை கழட்டுர்றேன்” என்று அந்தப்பெண் அழும் போது ஈரக்குலையெல்லாம் நடுங்குறது.
— VASUGI BHASKAR (@bhaskarvasugi) March 11, 2019
கண்ணை மூடி சரமாரியாக வாள் வீசி கழுத்தறுத்து போடுமளவான கோவம் அந்தப்பொறுக்கிகள் மேல் உற்பத்தியாகிறது. #ArrestPollachiRapists
மேலும் அதில் இளம்பெண் ஒருவரை பாலியல் கொடுமை செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதனை கண்ட அனைவரும் இரத்தம் கொதித்து போனர். மேலும் அந்த கொடூர மிருகங்களுக்கு உடனடியாக தணடனை கொடுக்கவேண்டும் எனவும் குரல் எழுப்பி வந்தனர்.
ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்ப்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்.
— pa.ranjith (@beemji) March 12, 2019
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு உத்தரவில் சதீஷ், வசந்த் குமார், சபரிராஜன் இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை கோவை மாவட்ட காவல்துறை ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
#PunishTheRapists pic.twitter.com/MAmNyho1L1
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) March 12, 2019
இந்நிலையில் இந்த வழக்கினை இன்று காலை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது இந்த வழக்கை CBI க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெண்களை கொடூரமாக நாசம் செய்திருப்பது குலைநடுங்க வைக்கிறது. உடனடியாக இந்தக் கொடூரர்களை தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும்.#ArrestPollachiRapists
— M.Sasikumar (@SasikumarDir) March 11, 2019
மேலும் இந்த காமக்கொடூரன்களுக்கு எதிராக திரைபிரபலங்களும், அரசியல் கட்சியினரும், பொது மக்களும், சமூக வலைதளவாசிகளும் கொந்தளித்து வருகின்றனர்.