53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மணிரத்னம் படத்தில் இணையும் பிரபல வில்லன் நடிகர்! புகைப்படம் உள்ளே.
தமிழில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவர் சிறந்த இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் கடந்த ஆண்டு வெளியான செக்க சிவந்த வானம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கவுள்ளார்.
மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, அமிதாப் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் 300 கோடி பட்ஜெட்டில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தாய்லாந்தில் ஆரம்பமாக உள்ளது. அதற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது வில்லனாக நடிகர் லால் தேர்வாகியுள்ளார்.
இவர் தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்து கலக்கியவர். அதற்காக தற்போது குதிரை ஒட்டுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறாராம்.