மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரமாண்ட பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போ ரிலீஸ்.! பரவி வரும் சூப்பர் தகவல்.!
மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்த திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த 30-ம் தேதி வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.மேலும் வசூல் சாதனையும் படைத்து வருகிறது.
இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளிவந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.