மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழ் ரசிகர்களே தெரியுமா?.. வெளிநாட்டில் மட்டும் பொன்னியின் செல்வன் இத்தனை கோடி வசூலித்துள்ளதாம்..! மாபெரும் வெற்றி கொண்டாட்டம்..!!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் நமது தமிழர்களின் வரலாற்றுக் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன்காரணமாகவே மக்கள் திரையரங்குகளில் ஆரவாரத்துடன் சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என்று 5 மொழிகளில் நேரடியாக வெளியாகிய இப்படம், 500 கோடி பட்ஜெட்டில் தயாரானதாகும். இப்படத்தின் முதல் பாகம் மட்டுமல்லாமல் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகளும் முன்பே முடிவடைந்துவிட்டன. இதனால் இயக்குனர்கள் அது எப்படி சாத்தியமானது? என்று மணிரத்தினத்தை வியந்து பார்க்கின்றனர்.
இப்படம் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், வெளிநாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாம். இதுவரையிலும் எந்த படத்திற்கும் கிடைக்காத அமோக வரவேற்பு பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்துள்ளதாக விநியோகிஸ்தர்கள் கூறி வருகின்றனர். இதன் மூலமாக படத்தின் இரண்டாம் பாகம் மாபெரும் வெற்றியடையும் என்பதில் எவ்வித மாற்றுகருத்தும் கிடையாது.