மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சோழதேசமே கொண்டாட்டம்.. பொன்னியின் செல்வனின் "பொன்னி நதி" பாடல் வெளியீடு..! வீடியோ உள்ளே..!!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கி எழுத வரலாற்று கதையை மையமாக கொண்டு "பொன்னியின் செல்வன்" என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்த நிலையில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா மற்றும் சரத்குமார் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்ததை தொடர்ந்து, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்த புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெறுகிறது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் குரலில் "பொன்னி நதி" என்ற முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. இதனைக்கண்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.