கொலை மிரட்டல் குறித்து விளக்கமளித்த பூஜா ஹெக்டே.. ரசிகர்கள் அதிர்ச்சி.!



Pooja hegde openup about thread

2010ம் ஆண்டு மிஸ். யூனிவெர்ஸ் அழகிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த "முகமூடி" திரைப்படத்தின் மூலம் 2012ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

PoojaPooja

இதையடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து வரும் பூஜா ஹேக்டே, கடைசியாக தமிழில் விஜயுடன் "பீஸ்ட்" படத்தில் நடித்திருந்தார். பீஸ்ட் படத்தில் இவர் விஜயுடன் ஆடிய "அரபிக்குத்து" பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் பூஜா ஹெக்டே.

சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் சென்றபோது அங்கு தகராறு ஏற்பட்டது என்றும், அதனால் பூஜா ஹெக்டே பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இந்தியா திரும்பி விட்டார் என்றும் செய்திகள் வெளியானது.

Pooja

இதையடுத்து பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வருவதாக ஒரு ட்வீட் வைரலாகி வந்தது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பூஜா ஹெக்டே தரப்பில், "தனக்கு கொலை மிரட்டல் எதுவும் வரவில்லை. யார் இப்படி வதந்தி பரப்புகிறார்கள்?" என்று கோபமாக கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.