ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
"சினிமாவில் அந்த மாதிரி விஷயம் எல்லாம் சகஜம் தான்" மனம் திறந்த பூஜா ஹெக்டே..
கோலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் முதன்முதலில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
முதல் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இதன் பின்னும் திரைப்படங்கள் நடித்தார். மேலும் இப்படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது. இதன் பிறகு விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இது போன்ற நிலையில், தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார் பூஜா ஹெக்டே. மேலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் பட வாய்ப்பு குறைந்து வரும் நிலையில் தொடர்ந்து பல்வேறு விதமான கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
மேலும் சமீபத்தில் பூஜா ஹெக்டே ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் பூஜா ஹெக்டே "சினிமாவில் திரைப்படங்கள் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் சாதாரணமான ஒரு விஷயம் தான். ஒரு படம் வெற்றி அடையும் என்று நாம் நினைத்தால் அது தோல்வி அடைந்து விடும். இவ்வாறு நேருக்கு மாறாகவே எப்போதும் நடக்கும். இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். இந்த மாதிரி விஷயங்கள் சினிமாவில் சாதாரணமான ஒன்று என்று கடந்து சென்று விடுவேன்" என்று கூறியிருக்கிறார்.