#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பீஸ்ட் நாயகியிடம், செல்பி எடுக்க வந்த இளைஞர் செய்த காரியம்! தீயாய் பரவும் வீடியோ!!
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். பூஜா ஹெக்டே தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது. பூஜா ஹெக்டே பிரபாஸுடன் இணைந்து நடித்த ராதே ஷ்யாம் திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பூஜா ஹெக்டே பிட்னஸ் மீது அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.
இந்நிலையில் அவர் அண்மையில் உடற்பயிற்சிகளை முடித்து விட்டு, ஜிம்மில் இருந்து வெளியே வரும் போது ரசிகர் ஒருவர் அவரை அணுகி செல்பி எடுக்க கேட்டுள்ளார். அவரும் மறுக்காமல் அந்த நபருடன் செல்பி எடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து செல்ல முயன்ற பூஜா ஹெக்டேவை மேலும் செல்பி எடுக்க அந்த இளைஞன் தொந்தரவு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்த மீடியா போட்டோகிராபர்கள் வெளியேற சொல்லவே அவர் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.