திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
16 லட்சம் பணபெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பூர்ணிமா செய்த முதல் காரியம்.! என்னனு பாத்தீங்களா!! வீடியோ..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடி திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7. உலகநாயகன் தொகுத்து வழங்க இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது மாயா, அர்ச்சனா, விஷ்ணு விஜய், விசித்ரா, மணி, தினேஷ், விஜய் வர்மா ஆகியோரே இருந்தனர்.
இவர்களில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று விஷ்ணு விஜய் பைனலுக்கு நேரடியாக தேர்வாகியுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் பணப்பெட்டி வைக்கப்பட்டது, பணப்பெட்டியின் தொகை ஏறி, இறங்கி இறுதியில் 16 லட்சம் வந்த நிலையில் போட்டியாளரான பூர்ணிமா அதனை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தார். அதனைத் தொடர்ந்து 16 லட்சம் கொண்ட பணப்பெட்டியுடன் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
சாமர்த்தியமாக செயல்பட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பூர்ணிமாவை அவரது குடும்பத்தினர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் பூர்ணிமாவும் செம ஹாப்பியாக குத்தாட்டம் போட்டார். பின்னர் அவர் கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் உள்ள மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Poornima 👏#BiggBoss7Tamil #BiggBossTamil7#Vijayakanthpic.twitter.com/gDAE6iuSUJ
— Sekar 𝕏 (@itzSekar) January 5, 2024