53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை கர்ப்பம்.. வாழ்த்தும் ரசிகர்கள்.!
தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் ஹீரோயினாக நடித்த நடிகை கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நக்சத்ரா கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் தற்போது சீரியல்களில் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியானதை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நக்சத்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய பாட்டியின் உடல்நிலை குறைவின் காரணமாக நெருங்கிய நண்பர்களுக்கு கூட சொல்ல முடியாத சூழ்நிலையில் எளிமையாக திருமணத்தை நக்சத்திரா முடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து வள்ளி சீரியல் முடிவடைந்த நிலையில் நக்சத்ரா தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக ஊடகத்தில் பரவும் செய்திக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.