மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோலிவுட்டில் புது காம்போவாக வரும் பிரபுதேவா - மடோனா படம்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என பன்முக திறமைகளை கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக திகழ்பவர் பிரபுதேவா. இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் காமிட்டாகி உள்ளார்.
இந்த படத்தை டிரான்ஸ்இந்தியா மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தில் புது காம்போவாக மடோனா செபாஸ்டியன், பிரபுதேவாவுக்கு ஜோடி சேர்ந்துள்ளார். ஒரு காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் யாஷிகா ஆன்ந்த், அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, ஒய்.ஜி மகேந்திரன், ஆடுகளம் நரேன், ரோபோ ஷங்கர், ஜான் விஜய், மதுசூதன்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.