மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மொட்டை அடித்துகொண்ட நடிகர் பிரபுதேவா! அதுவும் எதற்காக தெரியுமா?? தீயாய் பரவும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், முன்னணி நடிகர் என வலம் வருபவர் பிரபுதேவா. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரபுதேவா கைவசம் தற்போது யுங் மங் சங், பகீரா, ஊமை விழிகள், முசாசி, ஃப்ளாஷ் பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, ரெக்லா போன்ற படங்கள் உள்ளன. இதில் குழந்தைகள் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம் மை டியர் பூதம்.
இந்தப் படத்தை மஞ்சப்பை மற்றும் கடம்பன் போன்ற படங்களை இயக்கிய என்.ராகவன் இயக்கியுள்ளார். மேலும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ளார். மை டியர் பூதம் படத்தில் ரம்யா நம்பீசன், அஷ்வந்த், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபுதேவா மை டியர் பூதம் படத்தில் பூதமாக நடிக்கிறார். அதற்காக அவர் தனது தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.
Becoming Bootham for MY DEAR BOOTHAM pic.twitter.com/uaACWvLtjV
— Prabhudheva (@PDdancing) July 2, 2022