நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு.. பிரபுதேவா, வடிவேலு செய்த காரியத்தை பார்த்தீங்களா! வைரலாகும் சூப்பரான வீடியோ!!



prabhudeva-vadivelu-video-viral

தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மனதை திருடிவிட்டாய். இந்த படத்தில் வடிவேலு, விவேக் ஆகியோர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பர். மேலும் அவர்களுடன் இணைந்து நடிகர் பிரபுதேவாவும் காமெடியில் கலக்கி இருப்பார்.

இப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்களால் பெருமளவில் விரும்பி பார்க்கப்படுகிறது. அதிலும் வடிவேலு, 'சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்' என்று பாடி நடித்திருந்த காட்சி அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது. 

இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவரும் மீண்டும் சந்தித்துள்ளனர். அப்பொழுது வடிவேலு 'சிங் இன் த ரெயின்' பாடலைப் பாடி, பிரபுதேவாவைக் கட்டிப் பிடித்து மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோவை 'நட்பு' என பதிவிட்டு பிரபுதேவா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.