மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த இரண்டு பிரபல தமிழ் நடிகர்கள்! பல நாள் ரகசியத்தை கூறிய சேரன்.!
இயக்குனர் சேரன் இயக்கி, அவரே நடித்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று என்று கூறும் அளவிற்கு பிரமாண்ட வெற்றிபெற்றது.
ஒவ்வொருவரும் தங்கள் இளமை காலங்களில் நடந்த காதல் அனுபவங்களை நினைவு கூறும் வகையில் அமைந்த இந்த திரைப்படம் குறித்து சில முக்கிய தகவல்களை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சேரன். அதில், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் பிரபு தேவாதான் ஒப்பந்தமானார் என்றும், அதன் பின்னர் சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகினார் என்றும் சேரன் கூறியுள்ளார்.
பிரபு தேவாவிற்கு அடுத்ததாக, சீயான் விக்ரமை தாம் அணுகியதாகவும், அப்போதுதான் ஜெமினி என்ற சூப்பர் ஹிட் ஆக்சன் படத்தில் நடித்திருந்த விக்ரம், ஆக்சன் படத்தில் நடித்துவிட்டு, ரொமான்ஸ் படத்தில் நடிக்க அவர் விருப்பப்படவில்லை எனவும் சேரன் கூறியுள்ளார்.
இதுபோன்று பலரும் இந்த கதையில் நடிக்க மறுத்ததால், தானே இந்த கதையில் ஹீரோவாக நடித்ததாகவும் கூறியுள்ளார் சேரன்.