மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் பிரகாஷ்ராஜ்க்கும், முன்னாள் மனைவிக்கும் திருமண வாழ்க்கை இப்படித்தான் இருந்தது - ஜெயந்தி கண்ணப்பன் ஓபன்டாக்..!!
தமிழ் சினிமாவின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவரது நடிப்பில் சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் பிரகாஷ்ராஜின் வாழ்க்கை குறித்து ALS நிறுவனத்தின் ஜெயந்தி கண்ணப்பன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், "நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது முன்னாள் மனைவியின் திருமண வாழ்க்கை குறித்து நீங்கள் கூற விரும்புவது என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், ஜெயந்தி கண்ணப்பன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது நடிகை பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது மனைவியின் திருமணவாழ்க்கை மிகவும் அழகானது. லலிதாவை அவரது சகோதரி டிஸ்கோ சாந்தி வீட்டில்தான் சந்தித்தார்.
இவர்களுக்கு இருவரது வீட்டில் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தை உள்ளன. சினிமாதுறையில் உள்ளவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சின்ன காரணம் என்றால் கூட குடும்ப வாழ்க்கையை பாதித்துவிடுகிறது. அப்படித்தான் லலிதாவின் வாழ்க்கையிலும் நடந்தது.
லலிதாவை பொருத்தவரை விவாகரத்துக்குபிறகும் தன் குழந்தையின் மீது பிரகாஷ்ராஜுக்கு எல்லா உரிமையுமுண்டு. அதில் எந்த விதத்திலும் இடையூறாக இருக்கமாட்டேன் என்று தான் கூறியிருக்கிறார். அதேபோல் பிள்ளைகள் இருவரும் வெளிநாடுகளில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த பிரிவிற்குப் பின்னும் லலிதா எந்த ஒரு இடத்திலும் பிரகாஷ்ராஜ் குறித்து குற்றச்சாட்டு சொன்னதில்லை. அவர் வளர்ந்த குடும்ப பின்னணி அப்படி என்றே கூறலாம். பழகுவதற்கு மிகவும் இனிமையான குடும்பம் அவர்களது என்று கூறியுள்ளார்.