மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அறுவை சிகிச்சை செய்த பிரகாஷ்ராஜ் எங்கு சென்று, யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ஹீரோ, மிரட்டலான வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் என அசத்தி வரும் அவர் தமிழ் மட்டுமின்றி பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் அண்மையில் வெளிவந்த நவரசா என்ற அந்தராலஜி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வந்துள்ளார். அப்போது அவர் வீட்டில் தவறி விழுந்ததில் அவரது தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக ஹைதராபாத் சென்றார். மேலும் அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இந்நிலையில் பிரகாஷ்ராஜ் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து சற்று உடல் நலம் தேறிய பிரகாஷ்ராஜ் இன்று ஜிம்மிற்கு சென்றுள்ளார். அங்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.