மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அர்ஜுன் மன்னிப்பு கேட்கவேண்டும், பாலியல் புகார் அளித்த நடிகைக்கு ஆதரவு அளித்த பிரகாஷ்ராஜ்.!
தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள நடிகை ஸ்ருதி ஹரிஹரனிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்கவேண்டும் என பிரகாஷ் ராஜ் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிபுணன் படப்பிடிப்பின்போது அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். அந்த சம்பவம் நடந்ததற்கான ஆதாரமும் தன்னிடம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஸ்ருதி ஹரிஹரன் ஒரு திறமையான நடிகை. அதே சமயம் கன்னட சினிமாவின் பெருமைக்குரியவர் அர்ஜுன் சர்ஜா என்பதை மறக்கக் கூடாது.
இருப்பினும் இத்தனை நாட்களாக ஸ்ருதி தனியாக அனுபவித்த வலியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த புகாரை மறுத்துள்ள போதிலும் அர்ஜுன் அந்த சமயத்தில் நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்பதில் தவறு இல்லை. அவர் அப்படி செய்தால் அவரின் பெருந்தன்மையை காட்டும். பாலியல் தொல்லைக்கு ஆளான ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பெண்களை ஆதரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.