மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாட் ஓகே! நெக்ஸ்ட்.. பிரதமர் மோடியை பாராட்டிய நடிகர் விஷால்.! பங்கமாக கலாய்த்து பிரகாஷ்ராஜ் வெளியிட்ட பதிவு.!
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் நடித்துள்ள 'லத்தி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் துப்பறிவாளன் 2 படத்தையும் இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஷால் தனது குடும்பத்தினருடன் காசிக்கு சென்று தரிசனம் மேற்கொண்டுள்ளார்.
இதுக்குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அன்புள்ள மோடி ஜி, காசிக்கு சென்ற எனக்கு அங்கு மிக சிறப்பான தரிசனம் கிடைத்தது. உடன் புனிதமான கங்கை நதி நீரையும் தொட்டேன். காசி கோவிலை அற்புதமாக புதுப்பித்து அனைவரும் எளிதாக தரிசனம் மேற்கொள்ளும் வகையில் சிறப்பாக மாற்றம் செய்ததற்காக அந்த இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் என தெரிவித்திருந்தார்.
இந்த பதிவிற்கு பதிலளித்து மோடியும், "காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி" என ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் விஷால் மோடிக்கு வாழ்த்து கூறி பதிவு வெளியிட்டதை கலாய்க்கும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஷாட் ஓகே! அடுத்து என குறிப்பிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
Shot Ok…. Next ??? … #justasking https://t.co/uybmBFVSwZ
— Prakash Raj (@prakashraaj) November 3, 2022