மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய நடிகர் பிரசாந்த்.! அரசுக்கு விடுத்த கோரிக்கை!!
கடந்த மாதம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு அதிக கனமழை பெய்தது. இதனால் பெரும் சேதங்கள் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி வருகிறது. மேலும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அண்மையில் கூட நடிகர் விஜய் நெல்லை மற்றும் தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிலையில் நடிகர் பிரசாந்த்தும் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. கடவுள் அந்த பாக்கியத்தை கொடுத்துள்ளார். என்னால் முடிந்தவரை தொடர்ந்து உதவி செய்வேன்.
மழை வெள்ளத்தின் போது தங்களின் உயிரை பெரிதாக கருதாமல் போலீசார்கள், மீட்புப் பணியினர், அரசு அதிகாரிகள் மக்களின் உயிரை காப்பாற்ற சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒவ்வொரு முறையும் புதிதாக நாம் கற்றுக் கொள்கிறோம். மீண்டும் இதுபோன்று தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.