திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் ஆத்மா சாந்தியடைய, பிரபலங்கள் செய்த நெகிழ்ச்சி காரியம்! வைரலாகும் புகைப்படங்கள்!
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 25ம் தேதி உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க, சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபியின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் எஸ்பிபியின் சகோதரி சைலஜா அவரது கணவர் சுபலேகா சுதாகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் , பாடகி அனுராதா ஸ்ரீராம், பாடகர் மனோ மற்றும் நடிகர் மயில்சாமி ஆகியோர் மோட்ச தீபம் ஏற்றி அருணாச்சலேஸ்வரர் பாடலை பாடி வழிபட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் இசைஞானி இளையராஜா கடந்த மாதம் 26 ஆம் தேதி திருவண்ணாமலை கோயிலில் எஸ்பிபியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார்.