#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன் டிவியில் நியூ என்ட்ரி கொடுக்கும் 90'ஸ் பிரபலம் ப்ரீத்தா ராகவ்! அதுவும் எந்த ஹிட் சீரியலில் தெரியுமா??
90ஸ் காலகட்டங்களில் ஏராளமான சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர்கள் ராகவ்- ப்ரீத்தா ஜோடி. சிறந்த காதல் தம்பதிகளாக விளங்கி வந்த அவர்கள் ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர்.
பிரீத்தா தொலைக்காட்சி தொடர்களிலும், வெள்ளித்திரையில் சில படங்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் தற்போது சூட்டிங்கில் இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, மீண்டும் சன் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் மூலம் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவது சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர்தான் அன்பே வா. நாள்தோறும் இரவு ஒளிபரப்பாகும் இத்தொடரின் மூலம் ப்ரீத்தா புதிய என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் என்ன ரோலில் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது