மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உணவின்றி பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் நடிகர் ப்ரித்விராஜ்..!
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகர் ப்ரித்விராஜ். இவர் தமிழில் கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சேர்ந்து கிட்டத்தட்ட 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட மலையாளத்தின் டாப் ஸ்டார், தீ கம்ப்ளீட் ஆக்டர் மோகன்லால் அவர்களை வைத்து லூசிபர் எனும் படத்தை தனது முதல் படமாக இயக்கினார்.
இந்நிலையில் ஆடுஜீவிதம் எனும் படத்தின் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டுக்கு சென்றுள்ளார்.கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் காரணமாக ஜோர்டான் நாட்டில் போக்குவரத்துகள் அனைத்தும் திருந்தப்பட்டதால் அவரால் தனது வீட்டிற்கு வர இயலாமல் போனது.
படக்குழுவினருடன் பாலைவனத்தில் உள்ள முகாம் ஒன்றில் இருந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் அனைவரும் இந்தியா வர ஏங்குவதாகவும், உண்பதற்கு சரியான உணவில்லாமல் படக்குழுவினர் கஷ்டப்படுவதாகவும் உருக்கமாக கூறியுள்ளார்.