மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த நடிகர்னா டபுள் ஓகே!! ஆர்.ஜே பாலாஜியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய்யுடன் இணைந்து வாமனன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். இதனை தொடர்ந்து அவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரால் முன்னணி நடிகையாக வர இயலவில்லை. ஆனாலும் ப்ரியா ஆனந்த்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் தற்போது ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான, வசூல் சாதனை படைத்த பதாய் ஹோ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தை மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு இணை இயக்குனராக பணிபுரிந்த சரவணனும் இணைந்து உருவாக்க உள்ளாராம். இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது ப்ரியாஆனந்த் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் இதற்கு முன்பு எல்கேஜி திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.