மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்போர்ட்ஸ் பைக்கை தில்லாக ஓட்டிவரும் நடிகை ப்ரியா பவானி சங்கர்! வைரல் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரை பக்கம் சென்ற இவர் நடிகர் வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் என்ற திரைப்படம் மூலம் ஹீரோயின் ஆனார்.
அதனை அடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்தார். தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவரும் இவர் புதிதாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், ஆண்கள் ஓட்டும் கியர் உடைய பைக் ஒன்றை ஜாலியாக சிரித்தபடி ஒட்டி செல்கிறார் ப்ரியா பவானி சங்கர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.