திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இயக்குனர் சங்கர் படத்தில் இணையும் ப்ரியா பவானி சங்கர்- வெளியான புதிய தகவல்.
தமிழில் செய்திவாசிப்பாளராக இருந்து, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளத்திரைக்கு சென்ற அவர் மேயாத மான்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் நடித்தார்.
மேலும் தற்போது 'குறத்தி ஆட்டம்' மற்றும் 'மான்ஸ்டர்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் அடுத்தடுத்த பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கமல்- ஷங்கரின் கூட்டணியில் கடந்த 1996ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன படம் இந்தியன்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக கடந்த ஆண்டு முழுவதும் கூறப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் பூஜை இந்தாண்டு தொடக்கத்தில் போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பமானது.
இந்நிலையில் காஜல் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர், நடிகர் சித்தார்த்,மேலும் கோலிவுட்டில் வேகமாக வளர்ந்துவரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.