இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. காதலை சொன்ன ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் சொன்ன கியூட் பதிலை பார்த்தீங்களா!!



Priya bavani shankar answer to fan who propose to her

பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் அவர் மேயாதமான் படத்தில்  நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பிரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது அவரது கைவசம் குருதி ஆட்டம், ஓமண பெண்ணே, பொம்மை, பத்து தல உள்ளிட்ட பல  திரைப்படங்களும் உள்ளன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார். இந்த நிலையில் அண்மையில் ரசிகர் ஒருவர், ஒவ்வொரு முறை மேயாதமான் திரைப்படத்தை பார்க்கும் போதும் 5 நொடிகளுக்கு ஒருமுறை ப்ரியா பவானி சங்கர் மீது காதலில் விழுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த அவர், வாவ்.. அப்போதெல்லாம் நீங்கள் என்னை டேக் செய்து காதலை சொல்லலாம். இதயம் முரளி போல இருக்க வேண்டாம். உங்கள் அன்பிற்கு நன்றி என நெகிழ வைக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.