மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆஹா! கல்யாண ஆசை வந்துருச்சோ! ஆளை மயக்கும் புகைப்படம்! நடிகை பிரியா பவானி ஷங்கர் செய்த காரியத்தை பார்த்தீர்களா!
சீரியல் டூ சினிமா என கலக்கிவரும் ஒரு சில நடிகைகளில் நடிகை பிரியா பவானி ஷங்கரும் ஒருவர். சீரியல் மூலம் ஏகப்பட்ட வரவேற்பை பெற்ற இவர் மேயாத மான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாகி அறிமுகமானார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுத்தந்ததை தொடர்ந்து அவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பின்னர் பிரியா பவானி ஷங்கர் மான்ஸ்டர், மாபியா ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது அவரது கைவசம் குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, களத்தில் சந்திப்போம், பொம்மை ஆகிய படங்கள் உள்ளன. மேலும் இவர் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு, தகுதியான மணமகன்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார் .இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.