மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் ஜோடிகள் முடிந்ததும் அமீர்- பாவனிக்கு திருமணமா?? தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட வீடியோ! ஷாக்கில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் முதல் 4 சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஜோடியாக சேர்ந்து தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் இருவரும் நடுவர்களாக பங்கேற்றனர்.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் வெற்றி பெற்றனர் இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஐக்கி பெரி-தேவ், இசைவாணி- வேல்முருகன், அபிஷேக்- ஸ்ருதி, கணேஷ்கர்- ஆர்த்தி, அமீர்- பாவனி , சுஜா வருணி- சிவகுமார், பார்த்தசாரதி- தாமரை ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். ராஜு மற்றும் பிரியங்கா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர்.
நடிகை ரம்யா கிருஷ்ணன், நடன இயக்குனர் சதீஷ் இதில் நடுவராக உள்ளனர். இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது காதல் சர்ச்சையில் சிக்கிய பாவனி மற்றும் அமீர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் ஜோடியாக களமிறங்கியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வீடியோ எடுத்த பிரியங்கா, அவர்களிடம் பிக்பாஸ் ஜோடிகள் முடிந்த பிறகு இருவருக்கும் திருமணமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
அதற்கு அமீர் நான் நிறைய விஷயங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.பார்க்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் பாவனி தான் அமீருக்கு ராக்கி அல்லது ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் கட்டப்போவதாக சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இது ரீல் ஜோடியா அல்லது ரியல் ஜோடியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.