மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென்று இயக்குனருக்கு கடிதம் எழுதிய பிரியங்கா சோப்ரா.. என்ன எழுதி இருந்தார் தெரியுமா.?
கடந்த 2000ம் வருடம் உலக அழகிப் பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான "தமிழன்" திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கிய அவர், ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார்.
2003ல் இயக்குனர் அனில் சர்மா இயக்கத்தில், "தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் ஸ்பை" என்ற திரைப்படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். 2018ஆம் வருடம் தன்னை விட பத்து வயது குறைந்த அமெரிக்கா பாப் பாடகரான நிக் ஜோனசை திருமணம் செய்து ஒரு குழந்தையும் இருக்கிறது.
அனில் ஷர்மாவின் "கடார் 2" சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, வசூலில் சாதனை படைத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பிரியங்கா அவர் கணவர் நிக்குடன் இணைந்து இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "அனில் சார், கடார் வெற்றிக்கும் , வருங்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் அன்புடன் பிரியங்கா மற்றும் நிக்" என்று எழுதியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் அனில் சர்மா.