மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகை பிரியங்கா மோகனா இது.? இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியம்.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் பிரியங்கா மோகன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியவர் பிரியங்கா மோகன்.
2021 ஆம் வருடம் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளியான டாக்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது.
மேலும் டாக்டர் திரைப்படத்தில் நடித்த பிரியங்கா மோகனின் கதாபாத்திரம் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்திற்கு பின்பு டான், எதற்கும் துணிந்தவன், டிக் டாக், கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வருகிறார் பிரியங்கா மோகன்.
மேலும் ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகி பிசியான நடிகையாக இருந்து வரும் பிரியங்கா மோகன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்யாசமாக போட்டோ ஷூட் செய்து அதனை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.